ADDED : அக் 25, 2026 02:36 PM
சர்வதேச ‘டி–20’ அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 2வது அணியானது இந்தியா. ஏற்கனவே பாகிஸ்தான் அணி 304 ‘டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளது.
* சர்வதேச ‘டி–20’ல் நேரடியாக 200வது வெற்றியை (‘பவுல் அவுட்’, ‘சூப்பர் ஓவர்’ வெற்றி தவிர்த்து) பதிவு செய்த முதல் அணியானது இந்தியா.
* கடந்த 2006ல் முதல் முறையாக ‘டி–20’ போட்டியில் (எதிர்: தெ.ஆப்.,) விளையாடிய இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின் 100வது போட்டியில் (எதிர்: அயர்லாந்து, 2018) வென்ற இந்தியா, 200வது போட்டியில் (எதிர்: வெ.இண்டீஸ், 2023) தோல்வியடைந்தது. தற்போது 300வது போட்டியில் வெற்றி பெற்றது.
சிறந்த ‘சேஸ்’
சர்வதேச ‘டி–20’ அரங்கில் 5 விக்கெட்டுகளை இழந்த பின், அதிக ரன்னை ‘சேஸ்’ செய்து தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது இந்தியா. நேற்று, 70/5 ரன் எடுத்திருந்த இந்தியா, அதன்பின் 111 ரன்னை விரட்டி வெற்றி கண்டது. இதற்கு முன், 2025ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டை இழந்த பின், 88 ரன்னை ‘சேஸ்’ செய்திருந்தது இந்தியா.
* இப்படி சாதித்த அணிகளுக்கான பட்டியலில் 4வது இடம் பிடித்தது இந்தியா. முதலிடத்தில் பப்புவா நியூ கினியா அணி (153 ரன், எதிர்: சிங்கப்பூர், 2022) உள்ளது.
