/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அபிஷேக் சர்மா முதல் அனுபவம்: டிவிலியர்ஸ் ஆரூடம்
/
அபிஷேக் சர்மா முதல் அனுபவம்: டிவிலியர்ஸ் ஆரூடம்
ADDED : அக் 06, 2025 11:02 PM

மும்பை: ''உலகின் சிறந்த துவக்க பேட்டராக அபிஷேக் சர்மா திகழ்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் அசத்துவார்,''என டிவிலியர்ஸ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா செல்லும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 5 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் கான்பெரா (அக். 29), மெல்போர்ன் (அக். 31), ஹோபர்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேனில் (நவ. 8) நடக்கவுள்ளன.
இதற்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் இடது கை துவக்க பேட்டர் அபிஷேக் சர்மா 25, மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது. சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 7 போட்டிகளில் 314 ரன் (சராசரி 44.85, ஸ்டிரைக் ரேட் 200.00) குவித்தார். இந்திய அணி 9வது முறையாக ஆசிய கோப்பை வெல்ல கைகொடுத்தார். இதுவரை 24 சர்வதேச 'டி-20' போட்டிகளில் 5 அரைசதம், 2 சதம் உட்பட 849 ரன் (சாராசரி 36.91, ஸ்டிரைக் ரேட் 196.07) எடுத்துள்ளார். அடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளார்.
விளாசல் வீரன்: 'பஞ்சாப் சிங்கமான' அபிஷேக் சர்மா, 'டி-20' போட்டிக்கு ஏற்ப முதல் பந்தில் இருந்தே விளாசுவது பலம். இவரை போலவே மைதானத்தின் நாலாபுறமும் பந்தை சிதறடிக்கும் திறன் பெற்றவர் தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ். 'மிஸ்டர் 360 டிகிரி' என போற்றப்பட்டவர். தற்போது அபிஷேக் ஆட்டத்தை வெகுவாக பாராட்டுகிறார்.
இது சாதகம்: டிவிலியர்ஸ் கூறுகையில்,'' அபிஷேக் சர்மா சிறப்பான 'பார்மில்' உள்ளார். இவரை உலகின் சிறந்த 'டி-20' துவக்க வீரர் என பலரும் வர்ணிக்கின்றனர். ஆஸ்திரேலிய சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் விளையாடுவார். இங்குள்ள ஆடுகளத்தில் பந்துகள் நன்கு 'பவுன்ஸ்' ஆவது இவருக்கு சாதகம். 'ஆப்-சைடில்' தேர்ட் மேன் திசையில் பவுண்டரி, சிக்சர் விளாசுகிறார்.
'லெக் சைடிலும்' சிக்சர் அடிக்கிறார். அனைத்து திசைகளிலும் சுழன்று ஆடுகிறார். இவரது ஆட்டத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். ஆசியாவில் அசத்திய இவர், ஆஸ்திரேலியாவிலும் ஆதிக்கம் செலுத்துவார்,''என்றார்.