தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/மழையால் போட்டி பாதியில் ரத்து: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்

மழையால் போட்டி பாதியில் ரத்து: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்

மழையால் போட்டி பாதியில் ரத்து: இந்திய ரசிகர்கள் ஏமாற்றம்


UPDATED : ஜூலை 02, 2026 03:03 PM

ADDED : ஜூலை 02, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 03:03 PM ADDED : ஜூலை 02, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஸ்டர்-லீ-ஸ்டீரிட்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் 'டி-20' போட்டி மழையால் பாதியில் ரத்தானது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டீரிட் நகரில் நடந்தது. இந்திய 'லெவன்' அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி 15, மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் இந்திய அணிக்கு திரும்பினர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

அபிஷேக் அபாரம்: இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் (2), இஷான் கிஷான் (0) ஏமாற்றினர். பின் இணைந்த அபிஷேக் சர்மா, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி நம்பிக்கை தந்தது. சாகிப் மெகமூது வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் அபிஷேக். லுாக் உட் வீசிய 5வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார் ஷ்ரேயஸ். அபாரமாக ஆடிய அபிஷேக், 20 பந்தில் அரைசதம் விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது அபிஷேக் (59) அவுட்டானார்.

திலக் வர்மா (13) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஷ்ரேயஸ், 47 பந்தில் 68 ரன் குவித்தார். ஹர்ஷித் ராணா (0) ஏமாற்றினார். ஷிவம் துபே 21 பந்தில் 42* ரன் எடுத்து கைகொடுத்தார். அக்சர் படேல் (3) 'ரன்-அவுட்' ஆனார்.

இந்திய அணி 20 ஓவரில் 189/7 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சாகிப் மெகமூது 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின் மழை குறுக்கிட போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டிதைய பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரண்டாவது போட்டி ஜூலை 4ல் மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us