
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராஜஸ்தானின் ஆடம் ஜாம்பா ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகினார்.
ஐ.பி.எல்., 17வது சீசனுக்கான ராஜஸ்தான் அணியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா இடம் பெற்றிருந்தார். கடந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ரூ. 1.5 கோடிக்கு ஒப்பந்தமான இவரை, ராஜஸ்தான் அணி தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில் சொந்த காரணங்களுக்கான 17வது சீசனில் இருந்து விலகினார். வலது கை சுழற்பந்துவீச்சாளரான இவர், கடந்த ஆண்டு ராஜஸ்தானுக்காக விளையாடிய 6 போட்டியில், 8 விக்கெட் சாய்த்திருந்தார்.
ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயத்தால் விலகினார். தற்போது ஜாம்பாவும் வெளியேறியதால் ராஜஸ்தான் பந்துவீச்சின் பலத்தை குறைக்கலாம். இருப்பினும் 'சுழலில்' அனுபவ அஷ்வின், யுவேந்திர சகால் ஜோடி சாதிக்கலாம்.

