/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வரலாறு படைத்தது ஆப்கன்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
/
வரலாறு படைத்தது ஆப்கன்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
வரலாறு படைத்தது ஆப்கன்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
வரலாறு படைத்தது ஆப்கன்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
ADDED : செப் 19, 2024 09:43 PM

சார்ஜா: சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி, முதன்முறையாக தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது.
சார்ஜா சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ் (9), டோனி டி ஜோர்ஜி (11), கேப்டன் மார்க்ரம் (2), டஸ்டப்ஸ் (0), ஜேசன் ஸ்மித் (0) ஏமாற்றினர். தென் ஆப்ரிக்க அணி 36 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த திணறியது.
பொறுப்பாக ஆடிய வியான் முல்டர் (52) அரைசதம் கடந்து கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 33.3 ஓவரில் 106 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 4, கசன்பர் 3, ரஷித் கான் 2 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்மதுல்லா உமர்ஜாய் (25*), குல்பதீன் நைப் (34*) கைகொடுக்க, 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் வெற்றி பெற்றது. இதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 'டி-20', 2 ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.