sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ஒரே நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள் * முன்னிலை பெற்றது ஆஸி.,

/

ஒரே நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள் * முன்னிலை பெற்றது ஆஸி.,

ஒரே நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள் * முன்னிலை பெற்றது ஆஸி.,

ஒரே நாளில் சரிந்த 20 விக்கெட்டுகள் * முன்னிலை பெற்றது ஆஸி.,


ADDED : டிச 26, 2025 11:10 PM

Google News

ADDED : டிச 26, 2025 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: 'பாக்சிங் டே' டெஸ்ட் முதல் நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலிய அணி 46 ரன் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 3-0 என தொடரை கைப்பற்றியது. 4வது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று துவங்கியது.

மீண்டும் கேப்டனாக களமிறங்கினார் ஸ்மித். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.

ஜோஷ் 'ஐந்து'

ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், வெதரால்டு ஜோடி துவக்கம் தந்தது. அட்கின்சன் பந்தில் ஹெட் (12) போல்டானார். மறுபக்கம் வேகத்தில் மிரட்டினார் ஜோஷ் டங்க். வெதரால்டு (10), லபுசேன் (6), ஸ்மித் (9) என மூவரையும் வரிசையாக வெளியேற்றினார். கவாஜா 29, கேரி 20 ரன் எடுத்தனர். கேமரான் கிரீன் (17) ரன் அவுட்டானார்.

மைக்கேல் நேசர் அதிகபட்சம் 35 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில், 45.2 ஓவரில் 152 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் ஜோஷ் 5 விக்கெட் சாய்த்தார்.

சரிந்த 'டாப்'

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கிராலே (5), டக்கெட்டை (2), ஸ்டார்க் விரைவில் வெளியேற்றினார். பெத்தெல் (0), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் (0) என இருவரும், நேசர் 'வேகத்தில்' வீழ்ந்தனர். இங்கிலாந்து அணி 16 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

சற்று தாக்குப்பிடித்த ஹாரி புரூக், 34 பந்தில் 41 ரன் எடுத்தார். கேப்டன் ஸ்டோக்ஸ் (16) நேசரிடம் சிக்கினார். பின் வரிசையில் அட்கின்சன் மட்டும் 28 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 29.5 ஓவரில் 110 ரன்னுக்கு சுருண்டது. நேசர் 4, போலண்ட் 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., முன்னிலை

முதல் இன்னிங்சில் பெற்ற 42 ரன் முன்னிலையுடன், மீண்டும் களமிறங்கிய ஆஸ்திரேலியா. முதல் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்து, 46 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

94,199 ரசிகர்கள்

மெல்போர்ன் மைதானத்தில் நேற்று 94,199 பேர் போட்டியை கண்டு ரசித்தது சாதனையாக அமைந்தது. இதற்கு முன் 2015 உலக கோப்பை தொடரின் பைனலை (ஆஸி.,-நியூசி.,) 93,103 பேர் பார்த்தனர்.

இது அதிகம்

'பாக்சிங் டே' டெஸ்டில் ஒரு நாளில் அதிக விக்கெட் சரிந்தது நேற்று (மொத்தம் 20) நடந்தது. இதற்கு முன் 1998ல் 4வது நாளில் 18 விக்கெட் வீழ்ந்ததே அதிகமாக இருந்தது.

* ஆஷஸ் தொடரில் 1888ல் லார்ட்ஸ் டெஸ்டில் ஒரு நாளில் 27 விக்கெட் வீழ்ந்தது, முதலிடத்தில் உள்ளது.

27 ஆண்டுக்குப் பின்

மெல்போர்ன் மைதானத்தில் 27 ஆண்டுக்குப் பின் 5 விக்கெட் சாய்த்த இங்கிலாந்து பவுலர் ஆனார் ஜோஷ் டங். முன்னதாக 1998ல் டேரன் காப் இதுபோல அசத்தி இருந்தார்.






      Dinamalar
      Follow us