தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனல் நோக்கி இந்திய பெண்கள்: வங்கதேசத்துடன் இன்று அரையிறுதி

பைனல் நோக்கி இந்திய பெண்கள்: வங்கதேசத்துடன் இன்று அரையிறுதி

பைனல் நோக்கி இந்திய பெண்கள்: வங்கதேசத்துடன் இன்று அரையிறுதி


ADDED : செப் 19, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 10:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிஸ்ஸின்: பெண்களுக்கான கிரிக்கெட் அரையிறுதியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதியில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தியது. இன்று நகோயா அருகில் உள்ள நிஸ்ஸின் என்ற இடத்தில் (கரோகி தடகள பார்க்) நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியை பொறுத்தவரையில் சமீபத்தில் ஆசிய கோப்பை வென்ற உற்சாகத்தில் உள்ளது. துவக்கத்தில் ஷபாலி வர்மா சிறப்பான 'பார்ம்' தொடர்கிறது. பிரதிகாவுக்குப் பதில் வாய்ப்பு பெற்ற தமிழகத்தின் கமலினி முதல் போட்டியில் 'டக்' அவுட்டானர். இன்று வங்கதேசத்திற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால் அணியில் நிரந்தர இடத்தை பெற முயற்சிக்கலாம். தவிர ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் சேர்க்க காத்திருக்கின்றனர்.

பவுலிங்கில் உலகின் 'நம்பர்-1' ஸ்ரீ சரணி தொடர்ந்து மிரட்டுகிறார். ஜப்பானுக்கு எதிராக 4 விக்கெட் சாய்த்தார். ஷபாலியின் 'ஆல் ரவுண்டர்' திறமை, அனுபவ தீப்தி சர்மாவின் மிரட்டல் சுழற்பந்து வீச்சு உதவினால், தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா பைனல் செல்லலாம்.

மீள முடியுமா

சீனாவுக்கு எதிரான காலிறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், வங்கதேச அணி 'ஆடாம ஜெயித்து' அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. தவிர சமீபத்திய ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்தியாவிடம் தோற்ற விரக்தியில் இன்று களமிறங்கும். பேட்டிங்கில் திலாரா, ஜுவைரியா, கேப்டன் நிகர் சுல்தானா, ஷொர்னா ரன் சேர்க்கலாம். பவுலிங்கில் சுல்தானா, மருபா, ரபேயா உள்ளனர்.

இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை அரையிறுதி போல, மீண்டும் இலங்கை வெல்ல காத்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us