/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலிய பெண்கள் அசத்தல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
/
ஆஸ்திரேலிய பெண்கள் அசத்தல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
ஆஸ்திரேலிய பெண்கள் அசத்தல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
ஆஸ்திரேலிய பெண்கள் அசத்தல்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது
ADDED : பிப் 17, 2024 07:43 PM

பெர்த்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ், 284 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.
ஆஸ்திரேலியா சென்ற தென் ஆப்ரிக்க பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்டில் பங்கேற்றது. பெர்த்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 76 ரன்னுக்கு சுருண்டது. அனாபெல் (210), கேப்டன் அலிசா ஹீலி (99), பெத் மூனே (78) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 575/9 ('டிக்ளேர்') ரன் குவித்தது.
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி 215 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆகி தோல்வியடைந்தது. டெல்மி டக்கர் (64), சோலி டிரையான் (64) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கிம் கார்த், டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இரட்டை சதம், 5 விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலியாவின் அனாபெல் ஆட்ட நாயகி விருது வென்றார். தொடர் நாயகி விருதை ஆஸ்திரேலியாவின் பெத் மூனே கைப்பற்றினார்.