/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸி., இரண்டாவது வெற்றி * 102 ரன்னுக்கு சுருண்டது நியூசி.,
/
ஆஸி., இரண்டாவது வெற்றி * 102 ரன்னுக்கு சுருண்டது நியூசி.,
ஆஸி., இரண்டாவது வெற்றி * 102 ரன்னுக்கு சுருண்டது நியூசி.,
ஆஸி., இரண்டாவது வெற்றி * 102 ரன்னுக்கு சுருண்டது நியூசி.,
ADDED : பிப் 23, 2024 10:39 PM

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
நியூசிலாந்து சென்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நேற்று இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
ஹெட் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், ஸ்மித் (11) ஜோடி வேகமான துவக்கம் தந்தது. 6.3 ஓவரில் 85 ரன் எடுத்த போது ஹெட் (22 பந்து, 45 ரன்) அவுட்டானார். கேப்டன் மிட்சல் மார்ஷ் 26 ரன் எடுக்க, மேக்ஸ்வெல் (6), இங்லிஸ் (5) ஏமாற்றினர். டேவிட் 17, கம்மின்ஸ் 28 ரன் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் பெர்குசன் 4, மில்னே, சியர்ஸ், சான்ட்னர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஜாம்பா ஜாலம்
நியூசிலாந்து அணிக்கு ஆலன் (6), யங் (5), கேப்டன் சான்ட்னர் (7) ஒற்றை இலக்க ரன் எடுத்தனர். சாப்மென் (2) கைவிட, பெர்குசனும் (4) ஏமாற்றினார். கிளன் பிலிப்ஸ் அதிகபட்சம் 42 ரன் எடுத்து அவுட்டானார். பின் வரிசையில் டிரன்ட் பவுல்ட் 16 ரன் எடுத்த போதும், நியூசிலாந்து அணி 17 ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டது. 72 ரன்னில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது.
126
ஆஸ்திரேலிய அணிக்காக 'டி-20' போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆனார் மேக்ஸ்வெல். இவர், 105 போட்டியில் 126 சிக்சர் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் பின்ச் (103ல் 125) உள்ளார்.