/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: இலங்கை அணி திணறல் ஆட்டம்
/
வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: இலங்கை அணி திணறல் ஆட்டம்
வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: இலங்கை அணி திணறல் ஆட்டம்
வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா: இலங்கை அணி திணறல் ஆட்டம்
ADDED : பிப் 08, 2025 10:13 PM

காலே: ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்த, இலங்கை அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் காலேயில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 330/3 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (120), கேரி (139) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 259 ரன் சேர்த்த போது பிரபாத் ஜெயசூர்யா பந்தில் கேப்டன் ஸ்மித் (131) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய ஜெயசூர்யா 'சுழலில்' ஜோஷ் இங்லிஸ் (0) சிக்கினார். பொறுப்பாக ஆடிய அலெக்ஸ் கேரி (156) நம்பிக்கை தந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 414 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (8), திமுத் கருணாரத்னே (14), தினேஷ் சண்டிமால் (12), கமிந்து மெண்டிஸ் (14) ஏமாற்றினர். மாத்யூஸ் (76) அரைசதம் கடந்தார். கேப்டன் தனஞ்செயா டி சில்வா (23) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்து, 54 ரன் முன்னிலையில் உள்ளது. குசால் மெண்டிஸ் (48) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் குனேமன் 4, லியான் 3 விக்கெட் சாய்த்தனர்.
ஆஸ்திரேலிய பவுலர்கள் அசத்தினால், சுலப வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றலாம்.