/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்
/
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்
ADDED : மே 29, 2024 10:26 PM

போர்ட் ஆப் ஸ்பெயின்: உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் ஜூன் 2ல் துவங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து உட்பட மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக தற்போது பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. வெஸ்ட் இண்டீசின் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா, நமீபியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா 'பீல்டிங்' தேர்வு செய்தது.
நமீபியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன் எடுத்தது. ஜேன் கிரீன் (38) ஆறுதல் தந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜாம்பா 3, ஹேசல்வுட் 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் (54*), டிம் டேவிட் (23), கேப்டன் மிட்சல் மார்ஷ் (18) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து வெற்றி பெற்றது.