/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஏலத்தில் ஆயுஷ் மாத்ரே, ரகுவன்ஷி * மும்பை பிரிமியர் தொடருக்கான...
/
ஏலத்தில் ஆயுஷ் மாத்ரே, ரகுவன்ஷி * மும்பை பிரிமியர் தொடருக்கான...
ஏலத்தில் ஆயுஷ் மாத்ரே, ரகுவன்ஷி * மும்பை பிரிமியர் தொடருக்கான...
ஏலத்தில் ஆயுஷ் மாத்ரே, ரகுவன்ஷி * மும்பை பிரிமியர் தொடருக்கான...
ADDED : மே 06, 2025 11:01 PM

மும்பை: மும்பை பிரிமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் ஆயுஷ் மாத்ரே உட்பட 280 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மும்பை பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் மூன்றாவது சீசன், வரும் மே 26-ஜூன் 8ல், மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் சூர்யகுமார் (மும்பை வடகிழக்கு), ரஹானே (பாந்த்ரா), ஷ்ரேயஸ் (மும்பை பல்கான்ஸ்), பிரித்வி ஷா (வடக்கு மும்பை), சர்பராஸ் கான் (மும்பை மேற்கு) உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இவர்களுக்கு ரூ. 20 லட்சம் தரப்படுகிறது.
இதனிடையே, மும்பை 'டி-20' தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடக்கிறது. மொத்தம் 280 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இவர்கள் 'சீனியர்' வீரர்கள் (ரூ. 5 லட்சம், முதல் தரம், லிஸ்ட் ஏ, 'டி-20'ல் பங்கேற்றவர்கள்), வளர்ந்து வரும் வீரர்கள் (ரூ. 3 லட்சம், 19, 23 வயது மும்பை அணியில் பங்கேற்றவரகள்), 'டெவலப்மென்ட்' வீரர்கள் (ரூ. 2 லட்சம், உள்ளூர், கிளப் வீரர்கள்) என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
18 பேர் கொண்ட ஒவ்வொரு அணியிலும் 4 சீனியர், குறைந்தது 5 வளர்ந்து வரும் வீரர்கள், 5 டெவலப்மென்ட் வீரர்கள் இடம் பெற வேண்டும். ஏலத்தில் அணி நிர்வாகம் ரூ. 80 லட்சம் வரை செலவிடும். நட்சத்திர வீரர்களுக்கு ரூ. 20 லட்சம் தரப்படுகிறது.
பிரிமியர் தொடரில் சிறப்பாக செயல்படும் ஆயுஷ் மாத்ரே (சென்னை), ரகுவன்ஷி (கோல்கட்டா), தனுஷ் கொடியன் (ராஜஸ்தான்) உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு வாங்கப்படலாம் என நம்பப்படுகிறது.