தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பாபா அபராஜித் ஓய்வு

பாபா அபராஜித் ஓய்வு

பாபா அபராஜித் ஓய்வு


ADDED : நவ 26, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் 32. கடந்த 2011ல் உள்ளூர் போட்டியில் தமிழக அணியில் அறிமுகமானார். பின், 2012ல் உலக கோப்பை (19 வயது) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இதில் காலிறுதி (எதிர்: பாக்.,), அரையிறுதியில் (எதிர்: நியூசி.,) ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார். தவிர இவர், விஜய் ஹசாரே டிராபி (2017–18), சையது முஷ்தாக் அலி டிராபி (2020–21, 2021–22) கைப்பற்றிய தமிழக அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

கடந்த 2024–25 சீசனில் கேரளா அணிக்காக விளையாடிய அபராஜித், கிரிக்கெட் லீக் அரங்கில் சென்னை, புனே அணிகளில் இடம் பெற்றிருந்தார். ஆனால் விளையாடும் ‘லெவன்’ அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதுவரை 102 முதல்தரம் (5199 ரன், 12 சதம், 27 அரைசதம், 75 விக்கெட்), 114 ‘லிஸ்ட் ஏ’ (4278 ரன், 8 சதம், 83 விக்கெட்), 63 ‘டி–20’ (1147 ரன், 4 அரைசதம், 17 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அபராஜித் அறிவித்தார்.

இதன்மூலம் பாபா அபராஜித்தின் 15 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறது. இனி, பயிற்சியாளராக செயல்பட போவதாக தெரிவித்துள்ளார். இதற்காக இவர், பி.சி.சி.ஐ.,யின் 2ம் நிலை பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றுள்ளார். சேப்பாக்கம் அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவதற்காக, டி.என்.பி.எல்., தொடரில் இருந்து விலகினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us