/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை அணியில் பதிரானா: 'டி-20' உலக கோப்பைக்கு தேர்வு
/
இலங்கை அணியில் பதிரானா: 'டி-20' உலக கோப்பைக்கு தேர்வு
இலங்கை அணியில் பதிரானா: 'டி-20' உலக கோப்பைக்கு தேர்வு
இலங்கை அணியில் பதிரானா: 'டி-20' உலக கோப்பைக்கு தேர்வு
ADDED : மே 09, 2024 09:59 PM

கொழும்பு: 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் பதிரானா இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 2-29) நடக்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை அணி 'டி' பிரிவில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாள அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
தொடையின் பின்பகுதி காயத்தால் ஐ.பி.எல்., சென்னை அணியில் இருந்து பாதியில் விலகிய வேகப்பந்துவீச்சாளர் பதிரானா 21, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோல ஐ.பி.எல்., மும்பை அணியில் இருந்து காயத்தால் விலகிய இடது கை வேகப்பந்துவீச்சாளர் தில்ஷன் மதுஷங்காவுக்கும் இடம் கிடைத்துள்ளது.
கேப்டனாக ஹசரங்கா, துணை கேப்டனாக சரித் அசலங்கா அறிவிக்கப்பட்டனர். சீனியர் வீரர் மாத்யூசும் தேர்வானார்.
இலங்கை அணி: ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, கமிந்து மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, மாத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்செயா டி சில்வா, மகேஷ் தீக் ஷனா, துனித் வெல்லாலகே, துஷ்மந்த் சமீரா, நுவன் துஷாரா, பதிரானா, தில்ஷன் மதுஷங்கா.
மாற்று வீரர்கள்: அசிதா பெர்ணான்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுகா ராஜபக்சே, ஜனித் லியானகே.