/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கதேச அணி அறிவிப்பு: இந்திய டெஸ்ட் தொடருக்கு
/
வங்கதேச அணி அறிவிப்பு: இந்திய டெஸ்ட் தொடருக்கு
ADDED : செப் 12, 2024 10:56 PM

தாகா: இந்தியா வரவுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், செப். 19ல் சென்னை, சேப்பாக்கத்தில் துவங்குகிறது. இரண்டாவது போட்டி கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வங்கதேச வீரர்களில், வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் தவிர, மற்ற அனைவரும் மீண்டும் தேர்வாகினர். இடுப்பு பகுதி காயத்தால் ஷோரிபுல் விலகினார். இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டர் ஜாக்கர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் அறிமுகமான ஜாக்கர் அலி, வங்கதேச அணிக்காக 17 'டி-20' போட்டியில் விளையாடி உள்ளார். தவிர இவர், 49 முதல் தர போட்டியில் (2862 ரன், 4 சதம், 19 அரைசதம்) பங்கேற்றுள்ளார்.
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), ஷாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், ஜாக்கர் அலி, லிட்டன் தாஸ், மோமினுல் ஹக், சாகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், டாஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், நயீம் ஹசன், கலீத் அகமது.