/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வங்கதேச அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
/
வங்கதேச அணி வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்
ADDED : டிச 16, 2024 09:22 PM

கிங்ஸ்டவுன்: முதல் 'டி-20' போட்டியில் அசத்திய வங்கதேச அணி 7 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கிங்ஸ்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (43), ஜேக்கர் அலி (27), ஷமிம் ஹொசைன் (27), மகேதி ஹசன் (26*) கைகொடுத்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ராவ்மன் பாவெல் (60) நம்பிக்கை தந்தார். ஜான்சன் சார்லஸ் (20), ஷெப்பர்ட் (22) ஓரளவு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 140 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் மகேதி ஹசன் 4, ஹசன் மஹ்முத், டஸ்கின் அகமது தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
ஆட்ட நாயகன் விருதை மகேதி ஹசன் வென்றார். வங்கதேச அணி 1-0 என முன்னிலை பெற்றது.