ADDED : ஆக 12, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான்செஸ்டர்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் காயத்தால் பங்கேற்பது சந்தேகம்.
இங்கிலாந்து வரவுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆக. 21-25ல் மான்செஸ்டரில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் (ஆக. 29 - செப். 2), ஓவல் (செப். 6-10) மைதானத்தில் நடக்கவுள்ளன.
இந்நிலையில் உள்ளூர் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33, தொடையின் பின்பகுதியில் காயமடைந்தார். இதனால் இவர், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம். ஒருவேளை இவர் விலகினால், துணை கேப்டன் போப் அணியை வழிநடத்துவார்.

