/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
191 ரன்னுக்கு சுருண்ட வங்கம்: ஜிம்பாப்வே அணி அபாரம்
/
191 ரன்னுக்கு சுருண்ட வங்கம்: ஜிம்பாப்வே அணி அபாரம்
191 ரன்னுக்கு சுருண்ட வங்கம்: ஜிம்பாப்வே அணி அபாரம்
191 ரன்னுக்கு சுருண்ட வங்கம்: ஜிம்பாப்வே அணி அபாரம்
ADDED : ஏப் 20, 2025 11:32 PM

சில்ஹெட்: ஜிம்பாப்வே பவுலர்கள் அசத்த, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு சுருண்டது.
வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சில்ஹெட்டில் முதல் டெஸ்ட் நடக்கிறது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் (14), ஷாத்மன் (12) ஏமாற்றினர். மோமினுல் ஹக் (56), கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (40) நம்பிக்கை தந்தனர். முஷ்பிகுர் ரஹிம் (4), மெஹிதி ஹசன் மிராஸ் (1) நிலைக்கவில்லை. ஜாக்கர் அலி (28) ஆறுதல் தந்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் முசரபானி, வெலிங்டன் மசகட்சா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்திருந்தது. பிரைன் பென்னெட் (40), பென் கர்ரான் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.