/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவை பயமுறுத்தும் பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் கரை சேருமா
/
இந்தியாவை பயமுறுத்தும் பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் கரை சேருமா
இந்தியாவை பயமுறுத்தும் பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் கரை சேருமா
இந்தியாவை பயமுறுத்தும் பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்டில் கரை சேருமா
UPDATED : ஜூன் 27, 2025 03:25 PM
ADDED : ஜூன் 26, 2025 11:26 PM

பர்மிங்ஹாம்: இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் நடக்க உள்ள பர்மிங்ஹாமில், 58 ஆண்டுகளில் இந்தியா வெற்றியே பெற்றதில்லை. ஒரு முறை 92 ரன்னுக்கு சுருண்டுள்ளது. இந்த சோக வரலாற்றை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் சுப்மன் கில் உள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் ஜெய்ஸ்வால், சுப்மன், ராகுல், ரிஷாப் (2) சதம் அடித்தும், இந்தியா தோற்றது. தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது.
இரும்பு கோட்டை: இரண்டாவது டெஸ்ட் வரும் ஜூலை 2ல் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இது, இங்கிலாந்தின் கோட்டையாக திகழ்கிறது. கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்கள் தலைமையில் கூட வெல்ல முடியவில்லை. கடந்த 58 ஆண்டுகளில் இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது.
பர்மிங்ஹாமில் 1967ல் மன்சூர் அலி கான் பட்டோடி தலைமையில் இந்தியா முதல் டெஸ்டில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் 92 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து, 132 ரன்னில் வென்றது. 2011ல் அலெஸ்டர் குக் 294 ரன் குவிக்க, இங்கிலாந்து இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரான 710/7 ரன்னை பதிவு செய்தது. 2022ல் இந்தியா நிர்ணயித்த 378 ரன்னை இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் 'சேஸ்' செய்து, எளிதாக வென்றது.
பர்மிங்ஹாமில் இந்திய பேட்டர்கள் தடுமாறுவது வழக்கம். இங்கு 16 இன்னிங்சில் இரு முறை மட்டுமே 300 ரன்னை கடந்துள்ளது. இம்முறையும் இளம் இந்திய பேட்டர்களுக்கு கடின சவால் காத்திருக்கிறது.