/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.63 கோடி
/
பிராட்மேன் தொப்பி ரூ. 2.63 கோடி
ADDED : டிச 04, 2024 11:02 PM

சிட்னி: பிராட்மேனின் 80 ஆண்டு பழமையான தொப்பி, ரூ. 2.63 கோடிக்கு ஏலம் போனது.
கிரிக்கெட் ஜாம்பவான், மறைந்த டான் பிராட்மேன். 52 டெஸ்டில் 6996 ரன் குவித்த இவரது சராசரி 99.94 ஆக உள்ளது. கடந்த 1947-48ல் டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் கடைசியாக, இந்தியாவுக்கு எதிராக களமிறங்கினார். சுதந்திர இந்தியாவின் முதல் தொடரான இதில், பிராட்மேன் 6 இன்னிங்சில் 715 ரன் (3 சதம், 1 இரட்டை சதம்) குவித்தார். ஆஸ்திரேலியா 4-0 என வென்றது.
அப்போது பிராட்மேன் அணிந்திருந்த பச்சை நிற தொப்பி ஏலம் விடப்பட்டது. அப்போது,' சூரிய ஒளியால் மங்கிய, பூச்சிகளால் லேசாக பாதிக்கப்பட்ட பிராட்மேன் தொப்பி,' என தெரிவிக்கப்பட்டது. 10 நிமிடம் நீடித்த இந்த ஏலத்தின் முடிவில், ஆஸ்திரேலிய வர்த்தகர் ஒருவர், ரூ. 2.63 கோடிக்கு வாங்கினார்.