sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்...

/

பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்...

பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்...

பும்ரா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்...


ADDED : பிப் 14, 2024 09:29 PM

Google News

ADDED : பிப் 14, 2024 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 881 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (841 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (416 புள்ளி), அஷ்வின் (326) முதலிரண்டு இடங்களில் தொடர்கின்றனர். இந்திய வீரர் அக்சர் படேல் (286) 5வது இடத்தில் நீடிக்கிறார்.

நபி 'நம்பர்-1'



ஒருநாள் போட்டி 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (314 புள்ளி) முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் அதிக வயதில் (39 ஆண்டு, ஒரு மாதம்) ஒருநாள் போட்டி 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரரானார். இதற்கு முன் 2015, ஜூன் மாதம் வெளியான தரவரிசையில் இலங்கையின் தில்ஷன் (38 ஆண்டு, 8 மாதம்) இச்சாதனை படைத்திருந்தார்.

முதலிடத்தில் இருந்த வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (310) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 2019 மே 7 முதல் 'நம்பர்-1' வீரராக (1739 நாட்கள்) வலம் வந்தார்.






      Dinamalar
      Follow us