/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா காயம்: பணிச்சுமை காரணமா
/
பும்ரா காயம்: பணிச்சுமை காரணமா
ADDED : ஜன 04, 2025 10:23 PM

சிட்னி: காயத்தில் இருந்து மீண்டு பும்ரா, பந்துவீச வேண்டுமென இந்திய ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.
சிட்னி டெஸ்டின் 2ம் நாள் ஆட்டத்தில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியில் 'பெவிலியன்' திரும்பினார் பும்ரா. தற்காலிக கேப்டனாக கோலி செயல்பட்டார். மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பும்ராவுக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. நேற்று, மூன்று மணி நேரம், 20 நிமிடம் வரை 'பீல்டிங்', 'பவுலிங்' செய்யாத பும்ரா, இப்போட்டியில் 2 விக்கெட் (10 ஓவர்) வீழ்த்தி உள்ளார். 'ஸ்கேனின்' முடிவை பொறுத்து இன்று பும்ரா களமிறங்குவார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா கூறுகையில்,''பும்ரா முதுகு வலியால் அவதிப்படுகிறார். மருத்துவக் குழுவினர் கண்காணிக்கின்றனர். இக்குழுவின் ஆலோசனைப்படி பும்ரா இன்று விளையாடுவார்,'' என்றார்.
பணிச்சுமை காரணமாஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் பும்ரா, 151.2 ஓவர் (908 பந்து) வீசி உள்ளார். இதில் பெர்த்தில் 30 ஓவர் (8 விக்கெட்), அடிலெய்டில் 24 ஓவர் (4 விக்கெட்), பிரிஸ்பேனில் 34 ஓவர் (9 விக்கெட்), மெல்போர்னில் 53.2 ஓவர் (9 விக்கெட்), சிட்னியில் 10 ஓவர் (2 விக்கெட்) அடங்கும்.
இப்படி அதிக ஓவர் பந்துவீசியதால் பும்ராவின் முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டிருக்கலாம். ஏற்கனவே 2022-23ல் முதுகுப்பகுதி காயத்தால் பாதிக்கப்பட்ட பும்ரா, 12 மாதங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் இக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
32 விக்கெட்
'பார்டர்-கவாஸ்கர்' டிராபியில் 'வேகத்தில்' மிரட்டி வரும் பும்ரா, 32 விக்கெட் சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட் (32) கைப்பற்றிய இந்திய பவுலரானார் பும்ரா. இதற்கு முன் 1977-78ல் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி, 5 போட்டியில், 31 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

