/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோல்வியை தவிர்க்குமா ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் அபாரம்
/
தோல்வியை தவிர்க்குமா ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் அபாரம்
தோல்வியை தவிர்க்குமா ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் அபாரம்
தோல்வியை தவிர்க்குமா ஜிம்பாப்வே: ஆப்கானிஸ்தான் அபாரம்
ADDED : ஜன 05, 2025 11:11 PM

புலவாயோ: ஆப்கானிஸ்தான் பவுலர்கள் அசத்த, ஜிம்பாப்வே அணி தோல்வியை தவிர்க்க போராடுகிறது.
ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 157, ஜிம்பாப்வே 243 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 291/7 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் இஸ்மத் ஆலம் (101) சதம் கடந்தார். ஆப்கானிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 363 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின் 278 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய ஜிம்பாப்வே அணி, ஆட்டநேர முடிவில் 205/8 ரன் எடுத்திருந்தது. கேப்டன் எர்வின் (53) அவுட்டாகாமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 6 விக்கெட் வீழ்த்தினார்.