/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்
/
பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்
பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்
பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்
ADDED : ஜூலை 11, 2024 10:48 PM

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என செய்தி வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். இதில் 2002, 2013ல் சாம்பியன் ஆன இந்தியா, 2017ல் பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது.
தற்போது 8 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தானில் இத்தொடர் அடுத்த ஆண்டு பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் சென்றதில்லை. 2012-13ல் மட்டும் பாகிஸ்தான் இந்தியா வந்து, 'டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
இதன் பின் ஐ.சி.சி., தொடரில் மட்டும் இரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2023 ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன.
இதனிடையே சாம்பியன்ஸ் டிராபில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளுக்கான உத்தேச அட்டவணை வெளியானது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மோதும் போட்டிகள் லாகூரில் மட்டும் நடக்கும் என தெரிவிக்கப்பட்டன. இதை ஏற்க இந்தியா மறுத்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், 'சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது. இத்தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம். இல்லையெனில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் இலங்கை அல்லது துபாய்க்கு மாற்ற வேண்டும் என ஐ.சி.சி.,யிடம் தெரிவிக்க உள்ளோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.