sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மழையால் போட்டி ரத்து * யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

/

மழையால் போட்டி ரத்து * யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

மழையால் போட்டி ரத்து * யாருக்கு அரையிறுதி வாய்ப்பு

மழையால் போட்டி ரத்து * யாருக்கு அரையிறுதி வாய்ப்பு


ADDED : பிப் 25, 2025 10:54 PM

Google News

ADDED : பிப் 25, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராவல்பிண்டி: ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோத இருந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டி மழையால் ரத்து செய்ப்பட்டது.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று ராவல்பிண்டியில் நடக்க இருந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோத இருந்தன.

இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. இதில் வென்றால், அரையிறுதிக்கு செல்லலாம் என்ற நிலையில் களமிறங்கின. ஆனால் போட்டி துவங்கும் முன் மழை வரத் துவங்கியது. தொடர்ந்து பல மணி நேரம் நீடித்தது.

ஆடுகளம் அதைச்சுற்றியுள்ள பகுதியில் மட்டும் தார்ப்பாயினால் மூடப்பட்டு இருந்தன. மழை நின்றாலும் போட்டியை துவங்க குறைந்து ஒன்றரை மணி நேரம் தேவைப்படும் என்ற நிலை இருந்தது. இதனால் 20 ஓவர் கொண்ட போட்டி கூட நடத்த முடியாத சூழல் காணப்பட்டன.

தொடர்ந்து மழை பெய்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

யாருக்கு வாய்ப்பு

மழையால் போட்டி ரத்தானதால் தென் ஆப்ரிக்கா (3 புள்ளி, ரன்ரேட் 2.140), ஆஸ்திரேலியாவின் (3, 0.475) அரையிறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

* இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். மாறாக, இங்கிலாந்து அணி தனது அடுத்த இரு போட்டியில் ஆப்கானிஸ்தான் (இன்று), தென் ஆப்ரிக்காவை (மார்ச் 1) வென்றால் 4 புள்ளியுடன் அரையிறுதிக்கு செல்லும். தென் ஆப்ரிக்கா அல்லது ஆஸ்திரேலியா வெளியேறும்.

* ஆஸ்திரேலியா கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றால் அரையிறுதிக்கு நுழையலாம். ஒருவேளை தோற்றால், ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா முந்தலாம்.

* 'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.

ஐ.சி.சி., பணம் எங்கே

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் மைதானங்களை புதுப்பிக்க, ஐ.சி.சி., ரூ. 383 கோடி வழங்கியது. ஆனால், நேற்று மழை பெய்த போது, மைதானத்தின் சிறிய பகுதி மட்டும் மூடப்பட்டது. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில்,'' ராவல்பிண்டி மைதானம் முழுவதையும், தார்ப்பாயினால் மூடவில்லை. இதனால் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முக்கிய போட்டி ரத்தானது. இதுகுறித்து யாரும் பேசவில்லை. ஐ.சி.சி., வழங்கிய நிதி முழுமையாக செலவிடப்பட்டதா,'' என கேள்வி எழுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us