தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோவை இமாலய வெற்றி: திருச்சி அணி ஏமாற்றம்

கோவை இமாலய வெற்றி: திருச்சி அணி ஏமாற்றம்

கோவை இமாலய வெற்றி: திருச்சி அணி ஏமாற்றம்


UPDATED : ஆக 15, 2026 10:55 PM

ADDED : ஆக 15, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2026 10:55 PM ADDED : ஆக 15, 2026 10:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோவை அணி 116 ரன் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தியது.

திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

கோவை அணிக்கு ராதாகிருஷ்ணன் (24), சுரேஷ் லோகேஷ்வர் (12) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஆன்ட்ரி சித்தார்த் (9) ஏமாற்றினார். தலா ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ஷாருக்கான் (17), அம்ப்ரிஷ் (18) நிலைக்கவில்லை. அந்தோணி தாஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பாலசுப்ரமணியம் சச்சின், 36 பந்தில் அரைசதம் கடந்தார். அதிசயராஜ் டேவிட்சன் வீசிய 17 வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய சச்சின், ஈஸ்வரன் ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். அபாரமாக ஆடிய சச்சின், 45 பந்தில், 77 ரன் (4X6, 6X4) குவித்தார்.

சாய் ஸ்ரீராம் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மாதவ பிரசாத், அந்தோணி தாஸ் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கோவை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது. பிரசாத் (38 ரன், 2X6, 2X4), தீபன் லிங்கேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். திருச்சி அணி சார்பில் ஈஸ்வரன் 2 விக்கெட் கைப்பற்றினார்.

கடின இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு ராஜ்குமார் (32) நல்ல துவக்கம் தந்தார். ஷியாம் சுந்தர் (2), ஜெகதீசன் கவுசிக் (4) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். திருச்சி அணி 16.1 ஓவரில் 85 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கோவை சார்பில் தீபன் லிங்கேஷ், ஜாதவேத் சுப்ரமணியன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

நத்தத்தில் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. மீதமுள்ள லீக், 'பிளே-ஆப்' சுற்று போட்டிகள் வரும் ஆக. 18 முதல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளன.

தமிழக வீரருக்கு தடை

மதுரை, சேலம் அணிகள் (ஆக. 10) மோதிய டி.என்.பி.எல்., லீக் போட்டி நத்தத்தில் நடந்தது. இப்போட்டியின் போது வீரர்கள், நிர்வாகிகள் அமரும் பகுதியில், 26 வயது வீரர் ஒருவர் அலைபேசி பயன்படுத்தியதை, இந்திய கிரிக்கெட் போர்டு ஊழல் தடுப்பு குழு கண்டறிந்தது. உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து மற்ற அணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழக ரஞ்சி அணிக்காக அறிமுகம் ஆன 'ஆல் ரவுண்டரான' இவரிடம், சம்பவம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. தவிர, அலைபேசியை ஆராய்ந்ததில், பேட்டிங் உள்ளிட்ட எவ்வித தவறான செயலிலும் அவர் ஈடுபடவில்லை என உறுதியானது. எனினும், பி.சி.சி.ஐ., விதியை மீறிய அவருக்கு, முதன் முறை என்பதால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us