/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோவை அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் சேலம் ஏமாற்றம்
/
கோவை அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் சேலம் ஏமாற்றம்
கோவை அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் சேலம் ஏமாற்றம்
கோவை அணி 'திரில்' வெற்றி: கடைசி பந்தில் சேலம் ஏமாற்றம்
ADDED : ஜூலை 27, 2024 11:52 PM

நத்தம்: கடைசி பந்தில் சித்தார்த் மணிமாறன் பவுண்டரி அடிக்க கோவை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவை, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோவை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
சேலம் அணிக்கு விஷால் வைத்யா, கேப்டன் அபிஷேக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது விஷால் (36) அவுட்டானார். அபிஷேக் (20) 'ரன்-அவுட்' ஆனார். ராஜேந்திரன் விவேக் (43), ஹரிஷ் குமார் (42*) கைகொடுத்தனர். சேலம் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை கோவை அணிக்கு சாய் சுதர்சன் (22) ஆறுதல் அளித்தார். சுரேஷ் குமார் (14), முகிலேஷ் (14), அதீக் உர் ரஹ்மான் (10) நிலைக்கவில்லை. சுஜய் (48), கேப்டன் ஷாருக்கான் (50) நம்பிக்கை அளித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டன. சன்னி சாந்து பந்தவீசினார். முதல் பந்தில், 2வது ரன்னுக்கு ஓடிய வள்ளியப்பன் யுதீஸ்வரன் (0) 'ரன்-அவுட்' ஆனார். அடுத்த 3 பந்துகளை வீணடித்த சுப்ரமணியன், 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட, சித்தார்த் மணிமாறன் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
கோவை அணி 20 ஓவரில் 175/9 ரன் எடுத்து 6வது வெற்றியை பதிவு செய்தது. சித்தார்த் (7), சுப்ரமணியன் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.