sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

மதுரை அணிக்கு ஆறுதல் வெற்றி: கடைசி ஓவரில் சேப்பாக்கத்தை வீழ்த்தியது

/

மதுரை அணிக்கு ஆறுதல் வெற்றி: கடைசி ஓவரில் சேப்பாக்கத்தை வீழ்த்தியது

மதுரை அணிக்கு ஆறுதல் வெற்றி: கடைசி ஓவரில் சேப்பாக்கத்தை வீழ்த்தியது

மதுரை அணிக்கு ஆறுதல் வெற்றி: கடைசி ஓவரில் சேப்பாக்கத்தை வீழ்த்தியது


ADDED : ஜூலை 28, 2024 11:45 PM

Google News

ADDED : ஜூலை 28, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: கடைசி ஓவரில் அசத்திய மதுரை அணி 9 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. நேற்று திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, சேப்பாக்கம் அணிகள் மோதின. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த சேப்பாக்கம் அணி 'டாஸ்' வென்று 'பீல்டிங்' தேர்வு செய்தது.

மதுரை அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் (55), கேப்டன் ஹரி நிஷாந்த் (37) நம்பிக்கை அளித்தனர். சரவணன் 25 ரன்னில் அவுட்டானார். ஜெகதீசன் கவுசிக் (43*), சதுர்வேத் (26*) கைகொடுத்தனர். மதுரை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் குமார் (48), பிரதோஷ் ரஞ்சன் பால் (52) கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. குர்ஜப்னீத் சிங் பந்துவீசினார். இந்த ஓவரில் 6 ரன் மட்டும் கிடைத்தது. சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்த மதுரை அணி 2வது வெற்றியை பெற்றது.






      Dinamalar
      Follow us