/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கவுன்டி சாம்பியன்ஷிப்: புஜாரா சதம்
/
கவுன்டி சாம்பியன்ஷிப்: புஜாரா சதம்
ADDED : மே 05, 2024 11:08 PM

டெர்பி: கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் சசக்ஸ் அணி சார்பில் புஜாரா சதம் விளாசினார்.
இங்கிலாந்தில் கவுன்டி சாம்பியன்ஷிப் 'டிவிசன்-2' தொடர் நடக்கிறது. டெர்பியில் நடக்கும் லீக் போட்டியில் சசக்ஸ், டெர்பிஷயர் அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் டெர்பிஷயர் அணி 246 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய சசக்ஸ் அணிக்கு இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் புஜாரா சதம் கடந்து கைகொடுத்தார். இவர் 186 பந்தில் 11 பவுண்டரி உட்பட 113 ரன் விளாசினார். சசக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 479 ரன் குவித்து, 233 ரன் முன்னிலை பெற்றது.
நடப்பு கவுன்டி சீசனில் 3வது போட்டியில் விளையாடும் புஜாரா, முதலிரண்டு போட்டியில் 38 (எதிர்: லீசெஸ்டர்ஷைர்), 86, 44* (எதிர்: குளோசெஸ்டர்ஷைர்) ரன் எடுத்திருந்தார். கவுன்டி சாம்பியன்ஷிப் அரங்கில் 2022 முதல் சசக்ஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா, இதுவரை 9 சதம், 3 அரைசதம் அடித்துள்ளார்.