தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தொடரை வெல்ல இந்தியா 'ரெடி': ஆப்கனுடன் மீண்டும் மோதல்

தொடரை வெல்ல இந்தியா 'ரெடி': ஆப்கனுடன் மீண்டும் மோதல்

தொடரை வெல்ல இந்தியா 'ரெடி': ஆப்கனுடன் மீண்டும் மோதல்


ADDED : செப் 14, 2026 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதும் இரண்டாவது 'டி-20' போட்டி இன்று நடக்கிறது. தனது அசத்தலை தொடர உள்ள இந்திய அணி, தொடரை வெல்லக் காத்திருக்கிறது.

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் எளிதாக வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.

அபிஷேக் நம்பிக்கை

இந்திய அணிக்கு துவக்கம் தர அனுபவ சஞ்சு சாம்சன்-அபிஷேக் சர்மா ஜோடிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் நம்பிக்கை தந்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, முதல் போட்டியில் இடம் பெறவில்லை. எனினும், சாம்சன் (10 ரன்) மறுபடியும் ஏமாற்றம் தந்தார். கடந்த 5 'டி-20'ல் (5, 0, 1, 27, 10) 43 ரன் தான் எடுத்துள்ளார். இருப்பினும், இன்று இவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம்.

அபிஷேக் சர்மா (32 பந்தில் 82 ரன்) தனது மின்னல் வேக ரன் குவிப்பை தொடர்கிறார். இதனால் அணியின் வெற்றி எளிதாகிறது. இது தொடர்ந்தால் நல்லது. அடுத்து வரும் இஷான் கிஷான் தன்பங்கிற்கு கைகொடுக்கிறார். அடுத்து கேப்டன் ஷரேயஸ் ஐயர், திலக் வர்மா, ஷிவம் துபே, நிதிஷ் குமார் என 'பேட்டிங்' படை நீள்கிறது.

அர்ஷ்தீப் மிரட்டல்

வேகப்பந்துவீச்சில் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியது பலம். சக வீரர் அர்ஷ்தீப் சிங், 3 விக்கெட் சாய்த்தது, சுழலில் அக்சர் படேலுடன் இன்று வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். எனினும் ஐந்தாவது பவுலர் இல்லாதது சிக்கல் தருகிறது. இதற்கு இன்று தீர்வு காணலாம்.

ஓமர்சாய் விளாசல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் ஜத்ரன், குர்பாஸ் ஜோடி இன்று சிறப்பான துவக்கம் தர முயற்சிக்கலாம். மிடில் ஆர்டரில் செடிகுல்லா, குல்பதின், ரசூலி உள்ளிட்டோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஓமர்சாய் (64 ரன்), முகமது நபி (33) பேட்டிங், பவுலிங்கில் உதவுவது பலம். சுழற்பந்துவீச்சில் அனுபவ ரஷித் கான், நபி, நுார் அகமது, முஜீப் உர் ரஹ்மான் கைகொடுக்கலாம்.

சுழற்பந்து வீச்சில் அனுபவ ரஷித் கான் இருந்த போதும், ரன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வேகத்தில் பரூக்கி, முஜீப் அர் ரஹ்மான் விக்கெட் சாய்த்தால் நல்லது.

வருண் சக்ரவர்த்தி விலகல்

இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட தொடை பின்பகுதி காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 35, முதல் போட்டியில் 1 விக்கெட் சாய்த்தார். இருப்பினும் விலா பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, தொடரில் இருந்து விலகினார். வரும் ஆசிய விளையாட்டிலும் பங்கேற்பது சந்தேகம் தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us