ADDED : மே 19, 2025 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், இலங்கையில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20'), வளர்ந்து வரும் இளம் வீராங்கனைகளுக்கான தொடர்கள் நடக்க உள்ளன.
சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. இதனால் வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் எந்த அணியும் பங்கேற்காது என செய்திகள் வெளியாகின.
இது பற்றி இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் தேவாஜித் சைகியா கூறுகையில்,''இந்திய அணி விலகல் என்பது கற்பனையானது. எவ்வித உண்மையும் இல்லை. இத்தொடர் குறித்து இதுவரை எவ்வித முடியும் எடுக்கவில்லை. இப்போதைய நிலையில் பிரிமியர் தொடர், அடுத்து வரவுள்ள இங்கிலாந்து தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.