/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து கலக்கல் வெற்றி * 126 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
/
இங்கிலாந்து கலக்கல் வெற்றி * 126 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
இங்கிலாந்து கலக்கல் வெற்றி * 126 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
இங்கிலாந்து கலக்கல் வெற்றி * 126 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
ADDED : செப் 28, 2024 11:06 PM

லார்ட்ஸ்: நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ரன் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய நான்காவது போட்டி லார்ட்சில் நடந்தது.
'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ், பீல்டிங் தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. தலா 39 ஓவர்களாக மாற்றப்பட்டது.
ஹாரி அசத்தல்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (22), பென் டக்கெட் ஜோடி துவக்கம் தந்தது. வில் ஜாக்ஸ் (10) ஏமாற்றினாலும், டக்கெட், கேப்டன் ஹாரி புரூக் இணைந்து பவுண்டரி மழை பொழிந்தனர். டக்கெட் 63 ரன் எடுத்து அவுட்டாக, புரூக் (87 ரன், 58 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) ஜாம்பா பந்தில் வீழ்ந்தார்.
இங்கிலாந்து அணி 39 ஓவரில் 312/5 ரன் குவித்தது. 27 பந்தில் 62 ரன் எடுத்த (3 பவுண்டரி, 7 சிக்சர்) லிவிங்ஸ்டன், பெத்தெல் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஜாம்பா (ஆஸி.,) 2 விக்கெட் சாய்த்தார்.
பாட்ஸ் அபாரம்
ஆஸ்திரேலிய அணிக்கு மிட்சல் மார்ஷ் (28), டிராவிஸ் ஹெட் (34) துவக்கத்தில் ஆறுதல் தந்தனர். 'மிடில் ஆர்டரில்' ஸ்மித் (5), இங்லிஸ் (8), லபுசேன் (4), மேக்ஸ்வெல் (2) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 68/0 என இருந்த ஆஸ்திரேலியா, அடுத்து 28 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து, 96/6 என ஆனது.
அலெக்ஸ் கேரி (13), சீன் அபாட்டும் (10) கைவிட, ஆஸ்திரேலிய அணி 24.4 ஓவரில் 126 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. இங்கிலாந்தின் மாத்யூ பாட்ஸ் 4, கார்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர். ஒருநாள் தொடர் 2-2 என சமனில் உள்ளது.
'வள்ளல்' ஸ்டார்க்
ஒருநாள் போட்டியின் கடைசி ஓவரில் அதிக ரன் விட்டுக் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் ஆனார் மிட்சல் ஸ்டார்க். நேற்று இவர் வீசிய கடைசி ஓவரில் லிவிங்ஸ்டன் 28 ரன் (6, 0, 6, 6, 6, 4) விளாசினார். முன்னதாக ஆஸ்திரேலிய பவுலர்கள் சைமன் டேவிஸ், மெக்டெர்மாட், தோஹர்டி, ஜாம்பா, கிரீன் தலா 26 ரன் கொடுத்திருந்தனர்.