/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
92 பந்தில் சர்பராஸ் சதம் * புச்சி பாபு கிரிக்கெட்டில்...
/
92 பந்தில் சர்பராஸ் சதம் * புச்சி பாபு கிரிக்கெட்டில்...
92 பந்தில் சர்பராஸ் சதம் * புச்சி பாபு கிரிக்கெட்டில்...
92 பந்தில் சர்பராஸ் சதம் * புச்சி பாபு கிரிக்கெட்டில்...
ADDED : ஆக 18, 2025 10:56 PM

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை வீரர் சர்பராஸ் கான், 92 பந்தில் சதம் விளாசினார்.
தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, பஞ்சாப் உட்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் முதலில் லீக் முறையில் (3 நாள்) நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
தமிழகத்தின் சார்பில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் (ஏ), தமிழக கிரிக்கெட் சங்க லெவன் (சி) என இரு அணிகள் பங்கேற்கின்றன. திருவள்ளூரில் நடக்கும் போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஆயுஷ் மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார்.
சர்பராஸ் சதம்
மும்பை அணிக்கு முஷீர் கான் (30), ஆயுஷ் மாத்ரே (13) ஜோடி துவக்கம் தந்தது. 5வது வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான், 92 பந்தில் சதம் அடித்தார். இவர், 114 பந்தில் 138 ரன் (6X6, 10X4) எடுத்து 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். போதிய வெளிச்சமின்மையால் முடிவுக்கு வந்த முதல் நாள் முடிவில் மும்பை அணி 367/5 ரன் எடுத்திருந்தது.
தமிழகத்தின் சித்தார்த் 2 விக்கெட் சாய்த்தார்.
மற்றொரு போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், இமாச்சல பிரதேச அணிகள் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணிக்கு கேப்டன் பிரதோஷ் ரஞ்சன் (73), அஜிதேஷ் (71) கைகொடுக்க, முதல் நாள் முடிவில் 256/9 ரன் எடுத்திருந்தது.