ADDED : அக் 29, 2024 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, முதன் முறையாக 'நம்பர்-2' ஆனார். முதலிடத்தில் இங்கிலாந்தின் சோபி உள்ளார்.
தவிர ஆல் ரவுண்டர் வரிசையில் ஒரு இடம் முந்திய தீப்தி, நான்காவது இடம் பிடித்துள்ளார். ஒருநாள் அணி பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் மந்தனா, 4வது இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவர் முதலிடத்தில் உள்ளார்.

