/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீப்தி சர்மா 'நம்பர்-5' * பெண்கள் ஒருநாள் தரவரிசையில்
/
தீப்தி சர்மா 'நம்பர்-5' * பெண்கள் ஒருநாள் தரவரிசையில்
தீப்தி சர்மா 'நம்பர்-5' * பெண்கள் ஒருநாள் தரவரிசையில்
தீப்தி சர்மா 'நம்பர்-5' * பெண்கள் ஒருநாள் தரவரிசையில்
ADDED : டிச 31, 2024 10:41 PM

துபாய்: பெண்களுக்கான ஒருநாள் பவுலர் தரவரிசையில் 5வது இடத்துக்கு முன்னேறினார் தீப்தி சர்மா.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியானது.
பவுலர்கள் வரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 665 புள்ளியுடன் நான்காவது இடத்தில் இருந்து, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினார். 27 வயதான இவர், சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில், 2 போட்டியில் 8 விக்கெட் சாய்த்ததை அடுத்து, இந்த முன்னேற்றம் கிடைத்தது.
பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் இரு இடத்தில் தென் ஆப்ரிக்காவின் லாரா (773), இலங்கையின் சமாரி அத்தபத்து (733) உள்ளனர்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 3 இடம் பின்தங்கி, 13 வதாக உள்ளார்.
மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா 22வது (537), ரிச்சா கோஷ் 41வது (448) இடத்தில் உள்ளனர்.