/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ரா, ரோகித், கோலிக்கு 'ரெஸ்ட்' * இங்கிலாந்து தொடரில்...
/
பும்ரா, ரோகித், கோலிக்கு 'ரெஸ்ட்' * இங்கிலாந்து தொடரில்...
பும்ரா, ரோகித், கோலிக்கு 'ரெஸ்ட்' * இங்கிலாந்து தொடரில்...
பும்ரா, ரோகித், கோலிக்கு 'ரெஸ்ட்' * இங்கிலாந்து தொடரில்...
ADDED : டிச 31, 2024 10:47 PM

புதுடில்லி: இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20', ஒருநாள் தொடரில் பும்ரா, ரோகித், கோலிக்கு ஓய்வு தரப்பட உள்ளது.
இந்தியா வரவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து 'டி-20' (ஜன. 22, 25, 28, 31, பிப். 2), மூன்று ஒருநாள் (பிப். 6, 9, 12) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் 'டி-20' போட்டி ஜன. 22 ல் ஈடன் கார்டனில் நடக்கும். அடுத்து சென்னை (ஜன. 25), ராஜ்கோட் (ஜன. 28), புனே (ஜன. 31), வான்கடே (பிப். 2) மைதானத்தில் நடக்க உள்ளன.
அடுத்து ஒருநாள் போட்டிகள் நாக்பூர் (பிப். 6), கட்டாக் (பிப். 9), ஆமதாபாத்தில் (பிப். 12) நடக்கும். இதற்கான இந்திய அணியில் இருந்து முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தரப்பட உள்ளது. இதன் படி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் பும்ராவுக்கு, இங்கிலாந்து தொடரில் முழு ஓய்வு தரப்படலாம்.
'சீனியர்' வீரர்கள் ரோகித், கோலி 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒருநாள் தொடரில் இவர்களுக்கு ஓய்வு தரப்படும். இதன் பின், பிப். 19ல் துவங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் களமிறங்குவர்.
இது சரியா
இந்திய அணி கடந்த ஜூன் மாதம் 'டி-20' உலக கோப்பை வென்றது. இதன் பின் இலங்கை ஒருநாள் தொடரில் தோல்வி, சொந்த மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 0-3 என தோல்வி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 1-2 என பின்தங்கி நிலை என எல்லாம் இறங்குமாக உள்ளது.
தவிர, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்வதும் உறுதியில்லாமல் உள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன், இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கோலி, ரோகித்துக்கு ஓய்வு கொடுப்பது சரியா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
கேப்டன் கவுரவம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சார்பில் 2024ல் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இடம் பெற்ற கனவு 'லெவன்' அணி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான கேப்டனாக இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு பங்கேற்ற 13 டெஸ்டில், பும்ரா 71 விக்கெட் சாய்த்துள்ளார்.
துவக்க வீரராக இந்தியாவின் ஜெய்ஸ்வால் (15ல் 1478 ரன்), இங்கிலாந்தின் டக்கெட் (17ல் 1149 ரன்) இடம் பிடித்தனர். இங்கிலாந்தின் ஜோ ரூட் (17ல் 1556), ஹாரி புரூக் (12ல் 1100), நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா (12ல் 984), மேட் ஹென்றி (9ல் 48 விக்.,), இலங்கையின் கமிந்து மெண்டிஸ் (9ல் 1049), ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (9ல் 446), ஹேசல்வுட் (15ல் 35 விக்.,), தென் ஆப்ரிக்க சுழல் வீரர் மஹாராஜ் (15ல் 35 விக்.,) இதில் இடம் பெற்றனர்.