/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தோல்விக்கு காரணம் ஆடுகளமா * என்ன சொல்கிறார் வருண் சக்ரவர்த்தி
/
தோல்விக்கு காரணம் ஆடுகளமா * என்ன சொல்கிறார் வருண் சக்ரவர்த்தி
தோல்விக்கு காரணம் ஆடுகளமா * என்ன சொல்கிறார் வருண் சக்ரவர்த்தி
தோல்விக்கு காரணம் ஆடுகளமா * என்ன சொல்கிறார் வருண் சக்ரவர்த்தி
ADDED : ஜன 29, 2025 10:28 PM

ராஜ்கோட்: ''எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடுகளம் மந்தமாகி போனதால் தான் இலக்கை 'சேஸ்' செய்ய முடியவில்லை,'' என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்தியா வென்றது. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து (171/9) இலக்கைத் துரத்திய இந்திய அணி (145/9) 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சுழலில் கைகொடுத்த இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, 5 விக்கெட் சாய்த்தார். தோல்வி குறித்து இவர் கூறியது:
ராஜ்கோட்டில் பனிப்பொழிவு இங்கிலாந்து பவுலர்களுக்கு தொல்லை தரும் என நினைத்தோம். ஆனால் ஆடுகளம் எதிர்பார்ப்புக்கு மாறாக, மிகவும் மந்தமானது, அவர்களது பவுலர்களுக்கும் சாதகமாக அமைந்தது.
இதனால் பேட்டிங் செய்வது கடினம் ஆனது. இதுபோன்ற ஆடுகளத்தில் எப்படி பந்துவீசுவது என இங்கிலாந்து அணியின் 'ஜாம்பவான்' அடில் ரஷித்துக்கு நன்கு தெரியும். இதற்கேற்ப, பந்துகளை சிறப்பாக வீசி மிரட்டினார்.
நான் ஐந்து விக்கெட் சாய்த்த இரு போட்டியிலும் இந்தியா தோற்று விட்டது என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் இயல்பு. ஒருவேளை ஐந்து விக்கெட் வீழ்த்தாமல் இருந்தாலும், போட்டியில் தோற்க நேரிடலாம்.
என்னைப் பொறுத்தவரையில் அணியின் வெற்றிக்காக என்ன செய்யலாம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

