/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
நியூசிலாந்து அணி ரன் குவிப்பு * வில்லியம்சன் அரைசதம்
/
நியூசிலாந்து அணி ரன் குவிப்பு * வில்லியம்சன் அரைசதம்
நியூசிலாந்து அணி ரன் குவிப்பு * வில்லியம்சன் அரைசதம்
நியூசிலாந்து அணி ரன் குவிப்பு * வில்லியம்சன் அரைசதம்
ADDED : நவ 28, 2024 10:49 PM

கிறைஸ்ட்சர்ச்: கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 319/8 ரன் குவித்தது. வில்லியம்சன் 93 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் துவங்கியது. தான் பிறந்த மண்ணில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
காயத்தில் இருந்து மீண்ட வில்லியம்சன், நியூசிலாந்து அணியில் களமிறங்கினார்.
வில்லிம்சன் அபாரம்
நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம், கான்வே (2) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. வேகமாக ரன் சேர்த்த லதாம், 47 ரன் (54 பந்து) எடுத்தார். ரச்சின் ரவிந்திரா 34 ரன் எடுத்தார். மறுபக்கம், வில்லியம்சன் டெஸ்டில் தனது 36 வது அரைசதம் கடந்தார்.
நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 199/3 ரன் என வலுவான நிலையில் இருந்தது.
சோயப் 'நான்கு'
பின் மிட்செல் (19) அவுட்டானார். அட்கின்சன் வேகத்தில், 93 ரன் எடுத்த வில்லியம்சன் அவுட்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதன் பின் சுழலில் அசத்திய சோயப் பஷிர், பிளன்டல் (17), நாதன் ஸ்மித் (3), ஹென்றியை (18) வெளியேற்றினார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319/8 ரன் எடுத்திருந்தது. பிலிப்ஸ் (41), சவுத்தீ (10) அவுட்டாகாமல் இருந்தனர். சோயப் 4 விக்கெட் சாய்த்தார்.
சச்சினுக்கு அடுத்து...
சர்வதேச அரங்கில் அதிக முறை 90 அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்து, சதம் அடிக்காமல் அவுட்டான வீரர்களில் வில்லியம்சன் இரண்டாவது இடம் பிடித்தார். இவர் 13 முறை இதுபோல அவுட்டானார். இந்தியாவின் சச்சின் (27) முதலிடத்தில் உள்ளார்.
* தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (12), இந்தியாவின் டிராவிட் (12), 3வதாக உள்ளனர்.
* தவிர, 90 ரன்னுக்கும் மேல் எடுத்து சதம் அடிக்காமல் அதிக முறை அவுட்டான நியூசிலாந்து வீரர்களில் பிளமிங்குடன் (5) இணைந்து முதலிடம் பெற்றார் வில்லியம்சன் (5).