/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சதம் விளாசினார் ஹாரி புரூக் * நியூசிலாந்து திணறல் ஆட்டம்
/
சதம் விளாசினார் ஹாரி புரூக் * நியூசிலாந்து திணறல் ஆட்டம்
சதம் விளாசினார் ஹாரி புரூக் * நியூசிலாந்து திணறல் ஆட்டம்
சதம் விளாசினார் ஹாரி புரூக் * நியூசிலாந்து திணறல் ஆட்டம்
ADDED : டிச 06, 2024 10:44 PM

வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன் எடுத்தது. ஹாரி புரூக் சதம் அடித்தார்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் நேற்று வெலிங்டனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம், பீல்டிங் தேர்வு செய்தார்.
புரூக் அபாரம்
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில், டக்கெட் 'டக்' அவுட்டானார். கிராலே (17), பெத்தெல் (16) அவுட்டாக, அனுபவ ஜோ ரூட் (3) வந்த வேகத்தில் வெளியேறினார். இங்கிலாந்து 43/4 ரன் என திணறியது. பின் இணைந்த ஹாரி புரூக், போப் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. போப் அரைசதம் கடந்தார்.
5வது விக்கெட்டுக்கு 174 ரன் சேர்த்த போது, போப் (66) அவுட்டானார். கேப்டன் ஸ்டோக்ஸ் (2) ஏமாற்றினார். புரூக், சதம் விளாசினார். இவர் 115 பந்தில் 123 ரன் (5x6, 11x4) விளாசி, ரன் அவுட்டானார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 4, ரூர்கே 3 விக்கெட் சாய்த்தனர்.
சரிந்த 'டாப்'
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் லதாம் (17), கான்வே (11), ரச்சின் ரவிந்திரா (3) உள்ளிட்ட 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் நீடிக்கவில்லை. வில்லியம்சன் 37 ரன்னுக்கு திரும்பினார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 86/5 ரன் எடுத்து, 194 ரன் பின்தங்கி இருந்தது.