UPDATED : டிச 08, 2024 11:14 PM
ADDED : டிச 07, 2024 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெலிங்டன்: வெலிங்டன் டெஸ்டில் அட்கின்சன் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் வெலிங்டனில் நடந்தது.இரண்டாவது நாள் ஆட்டத்தில் 35 வது ஓவரை வீசினார் அட்கின்சன். இதன் 3 வது பந்தில் நாதன் ஸ்மித் (14) போல்டானார். அடுத்த இரு பந்தில் ஹென்றி, சவுத்தீயை 'டக்' அவுட்டாக்கி, 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார்.
15வது பவுலர்
டெஸ்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் சாய்த்த 15வது இங்கிலாந்து பவுலர் ஆனார் அட்கின்சன். 2017க்குப் பின் டெஸ்டில் இச்சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் ஆனார்.