/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து இரண்டாவது வெற்றி * சொந்தமண்ணில் வெ. இண்டீஸ் சோகம்
/
இங்கிலாந்து இரண்டாவது வெற்றி * சொந்தமண்ணில் வெ. இண்டீஸ் சோகம்
இங்கிலாந்து இரண்டாவது வெற்றி * சொந்தமண்ணில் வெ. இண்டீஸ் சோகம்
இங்கிலாந்து இரண்டாவது வெற்றி * சொந்தமண்ணில் வெ. இண்டீஸ் சோகம்
ADDED : நவ 11, 2024 11:08 PM

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார்.
பாவெல் ஆறுதல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (1), லீவிஸ் (8) ஜோடி சுமார் மோசமான துவக்கம் தந்தது. 'மிடில் ஆர்டரில்' நிகோலஸ் பூரன் (14), ராஸ்டன் சேஸ் (13) அணியை கைவிட்டனர். ஷெப்பர்டு 22 ரன் எடுத்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாவெல், 43 ரன் எடுத்து உதவினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 158/8 ரன் எடுத்தது. லிவிங்ஸ்டன், மவுஸ்லே, சாகிப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பட்லர் கலக்கல்
இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (0), வில் ஜாக்ஸ் (38) ஜோடி துவக்கம் தந்தது. பவுண்டரி (8), சிக்சர்களாக (6) விளாசிய பட்லர், 45 பந்தில் 83 ரன் எடுத்து அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 161/3 ரன் எடுத்து 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் (23), பெத்தெல் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இத்தொடரில் இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றது.