/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பாக்., அணி ரன் குவிப்பு * ஷான் மசூது, அப்துல்லா சதம்
/
பாக்., அணி ரன் குவிப்பு * ஷான் மசூது, அப்துல்லா சதம்
பாக்., அணி ரன் குவிப்பு * ஷான் மசூது, அப்துல்லா சதம்
பாக்., அணி ரன் குவிப்பு * ஷான் மசூது, அப்துல்லா சதம்
ADDED : அக் 07, 2024 11:26 PM

முல்தான்: முல்தான் டெஸ்டில் ஷான் மசூது சதம் விளாச, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 328/4 ரன் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக, மூன்று போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று முல்தானில் துவங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் 'ரெகுலர்' கேப்டன் ஸ்டோக்ஸ், தொடை பின்பகுதி காயம் காரணமாக விளையாடவில்லை. இவருக்குப் பதில் ஒலி போப் பொறுப்பேற்றார்.
அப்துல்லா சதம்
பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா சபிக், சயிம் அயுப் ஜோடி துவக்கம் தந்தது. அட்கின்சன் வீசிய நான்காவது ஓவரில் அயுப் (4) அவுட்டானார். பின் அப்துல்லா, கேப்டன் ஷான் மசூது இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
வோக்ஸ் பந்தில் ஒரு ரன் எடுத்த மசூது, டெஸ்டில் 5வது சதம் அடித்தார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த அப்துல்லா, ஜாக் லீச் பந்தை சிக்சருக்கு அனுப்பி, தனது 5வது சதம் எட்டினாார். இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன் சேர்த்த போது, அட்கின்சன் 'வேகத்தில்' அப்துல்லா (102) அவுட்டானார்.
மறுபக்கம் 150 வது ரன்னை எட்டிய மசூது (151), லீச் சுழலில் அவரிடமே 'பிடி' கொடுத்தார். பாபர் ஆசம் 30 ரன்னில் அவுட்டானார். பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 328/4 ரன் எடுத்திருந்தது. சாத் ஷகீல் (35), நசீம் ஷா (0) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்தின் அட்கின்சன் 2 விக்கெட் சாய்த்தார்.
நான்கு ஆண்டுக்குப் பின்...
பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூது, கடைசியாக 2020ல் இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் சதம் (156) அடித்தார். தற்போது நான்கு ஆண்டுக்குப் பின் நேற்று, மீண்டும் டெஸ்டில் சதம் (151) கடந்தார்.