ADDED : அக் 06, 2026 11:42 PM

துபாய்: சிறந்த வீரருக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், அபிஷேக் சர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். கடந்த செப்டம்பர் மாதத்தின் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் இந்தியாவின் சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வேயில் சிக்கந்தர் ராசா இடம் பெற்றுள்ளனர்.
அபிஷேக், 4 'டி-20'ல் ஒரு சதம் உட்பட 229 ரன் விளாசினார். மறுபக்கம் சுப்மன் கில், இரண்டு ஒருநாள் போட்டியில் ஒரு இரட்டை சதம் உட்பட 333 ரன் குவித்துள்ளார்.
சிறந்த வீராங்கனை பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, ஸ்ரீசரணி, இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து இடம் பெற்றுள்ளனர். இதில் பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் ஷபாலி, அதிக ரன் (360) குவித்துள்ளார். 7 போட்டியில் 18 விக்கெட் சாய்த்த ஸ்ரீசரணியை பொறுத்தவரையில் 'டி-20' பவுலர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார்.
