/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பறிபோனது 'உலக' வாய்ப்பு * வெ.இண்டீஸ் பெண்கள் சோகம்
/
பறிபோனது 'உலக' வாய்ப்பு * வெ.இண்டீஸ் பெண்கள் சோகம்
பறிபோனது 'உலக' வாய்ப்பு * வெ.இண்டீஸ் பெண்கள் சோகம்
பறிபோனது 'உலக' வாய்ப்பு * வெ.இண்டீஸ் பெண்கள் சோகம்
ADDED : ஏப் 19, 2025 11:07 PM

லாகூர்: ஐ.சி.சி., பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவில் (செப். 29-அக். 26) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டி பாகிஸ்தானில் நடந்தன. 6 அணிகள் மோதின. முதலிடம் பெற்ற பாகிஸ்தான் (10 புள்ளி) உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் (4) இமாலய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தாய்லாந்தை (0) சந்தித்தது. இதில் முதலில் களமிறங்கிய தாய்லாந்து 46.1 ஓவரில் 166 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹேலே மாத்யூஸ் (70 ரன், 29 பந்து), சினெல்லே (48 ரன், 17 பந்து) கைகொடுக்க 10.5 ஓவரில் 168/4 ரன் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
எனினும் ரன்ரேட் வித்தியாசம் 0.013 குறைவாக இருந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி (6, 0.626) உலக கோப்பை வாய்ப்பை இழந்து, சோகத்துடன் வெளியேறியது. இரண்டாவது இடம் பிடித்த வங்கதேசம் (6, 0.639), உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

