தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/600வது டெஸ்டில் அசத்துமா இந்தியா... * இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை

600வது டெஸ்டில் அசத்துமா இந்தியா... * இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை

600வது டெஸ்டில் அசத்துமா இந்தியா... * இன்று இலங்கையுடன் பலப்பரீட்சை


ADDED : ஆக 14, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் இன்று துவங்குகிறது. இது, இந்திய அணிக்கு 600வது டெஸ்ட்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் இன்று துவங்குகிறது.

இந்திய அணி, சுதந்திர தினத்தில், இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். துவக்கத்தில் ராகுல்-ஜெய்ஸ்வால், பயிற்சியில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல், பேட்டிங்கில் கைகொடுக்க வேண்டும். அடுத்து வரும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், துருவ் ஜுரெல் பொறுப்பாக செயல்பட வேண்டும்.

மூன்று சுழல்

பந்துவீச்சை பொறுத்தவரையில், இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவர். இதனால் குர்னுார் பிரார் வாய்ப்பு பெறுவது சந்தேகம் தான். சுழலில் குல்தீப், ஜடேஜா, மானவ் சுதார் என மூன்று பேர் களமிறங்குவது பலம்.

காலே கோட்டை

இலங்கை அணி கடந்த 1998 முதல் காலேயில் விளையாடிய 49 டெஸ்டில், 27ல் வென்றுள்ளது. முரளிதரன், ஹெராத் என உலகத் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் ஓய்வு பெற்று விட்ட போதும், பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ் என இருவரும், இம்மைதானத்தை இலங்கை அணியின் கோட்டையாக மாற்றியுள்ளனர்.

கேப்டன் தனஞ்செயா டி சில்வா, மீண்டும் அணிக்கு திரும்பிய டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், சோனல் தினுஷா ரன் சேர்க்க காத்திருக்கின்றனர். வேகப்பந்து வீச்சில் விஷ்வ பெர்னாண்டோ, லகிரு குமாரா கைகொடுக்கலாம்.



94 ஆண்டு பயணம்

டெஸ்ட் அரங்கில் இந்தியா 1932ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்டில் பங்கேற்றது. சி.கே.நாயுடு கேப்டனாக இருந்தார். * இந்திய அணி 1952ல் சென்னையில் நடந்த போட்டியில் (எதிர்-இங்கிலாந்து), முதல் டெஸ்ட் வெற்றியை (இன்னிங்ஸ், 8 ரன்) பதிவு செய்தது.

* 1952ல் டெஸ்ட் தொடரில் முதன் முறையாக இந்தியா வென்றது (எதிர்-பாக்.,).

* 1968ல் அன்னியமண்ணில் முதல் டெஸ்ட் வெற்றி, தொடர் வெற்றி பெற்றது இந்தியா. நியூசிலாந்தை அதன் சொந்தமண்ணில் 3-1 என சாய்த்தது.

* 94 ஆண்டு பயணத்தில், இன்று இந்திய அணி இன்று தனது 600வது டெஸ்டில் களமிறங்குகிறது. முன்னதாக 599 டெஸ்டில், 186ல் வென்றது. 224 'டிரா' ஆக, 188ல் தோற்றது. ஒரு டெஸ்ட் 'டை' ஆனது.

* இங்கிலாந்து (1,097), ஆஸ்திரேலியாவுக்கு (883) அடுத்து, 600 டெஸ்ட் என்ற மைல்கல்லை எட்டும் மூன்றாவது அணி இந்தியா. அடுத்த இரு இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (596), நியூசிலாந்து (487) உள்ளன.

பெருமை

இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,'' இந்தியாவின் சுதந்திர தினத்தில், தேசத்தின் 600 வது டெஸ்டில் கேப்டனாக களமிறங்குவது பெருமையாக உள்ளது,'' என்றார்.



2017க்குப் பின்...

இலங்கை மண்ணில் இந்திய அணி, 2017க்குப் பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கடைசியாக 3--0 என டெஸ்ட் தொடரை இந்தியா வென்றிருந்தது. அப்போது காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா (600, 240/3), 304 ரன்னில் இலங்கையை (291, 245) சாய்த்தது.

ஆடுகளம் எப்படி

காலே ஆடுகளம் துவக்கத்தில் பேட்டர்களுக்கு கைகொடுக்கும், அடுத்தடுத்த நாளில் சுழலுக்கு சாதகமாக மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us