தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா 'ஏ' ஏமாற்றம்

இந்தியா 'ஏ' ஏமாற்றம்

இந்தியா 'ஏ' ஏமாற்றம்


ADDED : அக் 09, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்தியா 'ஏ', ஆஸ்திரேலிய 'ஏ' அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி புதுச்சேரியில் நடந்தது.

'டாஸ்' வென்று களமிறங்கிய முதலில் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு மிட்சல் ஓவன் (25) துவக்கத்தில் அதிர்ச்சி தந்தார். சாம் கொன்ஸ்டாஸ் (67), பிலிப் (58) என இருவரும் அரைசதம் அடித்து கைகொடுத்தனர். கேப்டன் மெக்ஸ்வீனி (32), லச்லன் (25), நிகில் சவுத்ரி (19) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய 'ஏ' 49.5 ஓவரில் 275 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அர்ஷத் கான் 3, யாஷ் தாகூர் 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய 'ஏ' அணிக்கு சாய் சுதர்சன் (13), தேவ்தத் படிக்கல் (1), கேப்டன் ருதுராஜ் (12) என வரிசையாக 'ஷாக்' கொடுத்தனர். குஷாக்ரா (17), நிஷாந்த் (13) நிலைக்கவில்லை. ரஜத் படிதர் 67 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். விப்ராஜ் 23 ரன் எடுத்தார். மற்றவர்கள் கைவிட இந்திய 'ஏ' அணி 45.2 ஓவரில் 206 ரன்னில் ஆல் அவுட்டாகி, 69 ரன்னில் தோல்வியடைந்தது. 40 பந்தில் 34 ரன் எடுத்த அனுகுல் ராய் அவுட்டாகாமல் இருந்தார்.

ஏற்கனவே முதல் போட்டியில் தோற்ற இந்தியா 'ஏ', 0-2 என தொடரை இழந்தது. மூன்றாவது, கடைசி போட்டி நாளை புதுச்சேரியில் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us