sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

கான்பூர்... இந்தியா 'சூப்பர்' * மின்னல் வேகத்தில் வெற்றி * கோப்பை வென்று வரலாறு

/

கான்பூர்... இந்தியா 'சூப்பர்' * மின்னல் வேகத்தில் வெற்றி * கோப்பை வென்று வரலாறு

கான்பூர்... இந்தியா 'சூப்பர்' * மின்னல் வேகத்தில் வெற்றி * கோப்பை வென்று வரலாறு

கான்பூர்... இந்தியா 'சூப்பர்' * மின்னல் வேகத்தில் வெற்றி * கோப்பை வென்று வரலாறு


ADDED : அக் 01, 2024 11:07 PM

Google News

ADDED : அக் 01, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பூர்: கான்பூர் டெஸ்டில் பவுலர்கள், பேட்டர்கள் சிறப்பாக செயல்பட, இந்திய அணி இரண்டே நாளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடந்தது.

துரத்திய மழை

மழை காரணமாக முதல் நாளில் 35 ஓவர் மட்டும் வீசப்பட்டன. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 107/3 ரன் எடுத்தது. தொடர்ச்சியான மழை காரணமாக இரண்டு, மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக ரத்தானது. ஆனால் அடுத்த இரு நாளில் திருப்பம் ஏற்பட்டது.

'மின்னல்' வேகம்

நான்காவது நாளில் இந்திய பவுலர்கள் மிரட்ட, வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய இந்திய அணி பேட்டர்கள் துணிச்சலாக விளையாடி, 'டி-20' போல மின்னல் வேகத்தில் ரன் சேர்த்தனர். முதல் இன்னிங்சில் 285/9 ரன் எடுத்து, 'டிக்ளேர்' செய்தது. இந்தியா 52 ரன் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் முடிவில் வங்கதேச அணி, இரண்டாவது இன்னிங்சில் 26/2 ரன் எடுத்து 26 ரன் பின் தங்கி இருந்தது. ஷாத்மன் (7), மோமினுல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

'இடி' போல...

நேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நிதானமாக விளையாடி போட்டியை 'டிரா' செய்ய திட்டமிட்டது வங்கதேசம். ஆனால் இந்திய பவுலர்கள் 'இடியாக' இறங்கினர். முதலில் அஷ்வின் தனது 2வது ஓவரில் மோமினுலை (2) அவுட்டாக்கினார். கேப்டன் ஷாண்டோ, ஷாத்மன் சற்று தாக்குப்பிடித்தனர்.

அடுத்து ஜடேஜாவை அழைத்தார் ரோகித். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. தனது 2வது பந்தில் ஷாண்டோவை (19) போல்டாக்கினார் ஜடேஜா. அரைசதம் எட்டிய ஷாத்மனை (50), ஆகாஷ் திருப்பி அனுப்பினார். மீண்டும் மிரட்டிய ஜடேஜா, லிட்டன் தாஸ் (1), சாகிப்பை (0) அவுட்டாக்கினார். கடைசியில் முஷ்பிகுரை (37) பும்ரா போல்டாக்கினார். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இந்தியா சார்பில் பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

கலக்கல் வெற்றி

பின் 62 ஓவரில் 95 ரன் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கியது இந்தியா. ரோகித் (8), சுப்மன் (6) விரைவில் திரும்பிய போதும், ஜெய்ஸ்வால், கோலி இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். ஜெய்ஸ்வால் 51 ரன் எடுத்து திரும்பினார்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 17.2 ஓவரில் 98/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் 'மின்னல்' வேகத்தில் வெற்றி பெற்றது. கோலி (29), ரிஷாப் (4) அவுட்டாகாமல் இருந்தனர். டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

ரன்ரேட் சாதனை

டெஸ்ட் வரலாற்றில் இரு இன்னிங்சிலும் அதிக ரன்ரேட்டில் ரன் சேர்த்த அணி என புதிய சாதனை படைத்தது இந்தியா. கான்பூர் டெஸ்டில் இரு இன்னிங்சில் 52 ஓவர்கள் (34.4+17.2) பேட்டிங் செய்த இந்திய அணியின் ரன்ரேட் 7.36 ஆக எகிறியது. இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான லாகூர் டெஸ்டில்(2006) இந்தியாவின் ரன்ரேட் 5.3 ஆக இருந்ததே அதிகம்.

* தவிர, சர்வதேச அளவில் 19 ஆண்டுக்கு முன், தென் ஆப்ரிக்காவின் ரன்ரேட் (6.80) அதிகமாக இருந்தது.

இதில் 'டாப்-3' அணிகள்:

அணி எதிரணி ஆண்டு/இடம் ரன்ரேட்

இந்தியா வங்கதேசம் 2024/கான்பூர் 7.36

தென் ஆப்ரிக்கா ஜிம்பாப்வே 2005/கேப்டவுன் 6.80

இங்கிலாந்து பாகிஸ்தான் 2022/ராவல்பிண்டி 6.73



முரளிதரன் சாதனை சமன்

டெஸ்ட் அரங்கில் அதிகமுறை தொடர்நாயகன் விருது வென்ற வீரர்களில், இலங்கையின் முரளிதரனை (133 டெஸ்ட்), சமன் செய்தார் அஷ்வின் (102 டெஸ்ட்). இருவரும் தலா 11 முறை தொடர் நாயகன் ஆகினர். தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (166ல் 9) அடுத்து உள்ளார்.

* தவிர வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் பும்ராவுடன் இணைந்து முதலிடம் பெற்றார். இருவரும் தலா 11 விக்கெட் சாய்த்தனர். ஜடேஜா (9), மெஹிதி ஹசன் (9) அடுத்து உள்ளனர்.

18 வது தொடர்

இந்திய அணி சொந்தமண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடரில் (2013-2024) கோப்பை வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்து, ஆஸ்திரேலியா இரு முறை 10 (1994-2000, 2004-2008), வெஸ்ட் இண்டீஸ் 8 (1976-1986), நியூசிலாந்து 8 முறை (2017-2020) கோப்பை வென்றன.



180 வெற்றி

டெஸ்டில் அதிக வெற்றி பெற்ற அணி வரிசையில் தென் ஆப்ரிக்காவை (179) முந்தி, நான்காவது இடம் பிடித்தது இந்தியா (180 வெற்றி). முதல் மூன்று இடத்தில் ஆஸ்திரேலியா (414), இங்கிலாந்து (397), வெஸ்ட் இண்டீஸ் (183) உள்ளன.

312 பந்து

கான்பூர் டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்சிலும் சேர்ந்து 312 பந்தில் வெற்றி பெற்றது. குறைந்த பந்தில் வென்ற டெஸ்ட் வரிசையில் இது இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் 2024, கேப்டவுன் டெஸ்டில் இந்தியா 281 பந்தில் (எதிர்-தெ.ஆப்.,) வென்றது முதலிடத்தில் உள்ளது.

* ஒட்டுமொத்தமாக 276 பந்தில் வென்ற இங்கிலாந்து (1935, வெ.இண்டீஸ்) முதலிடத்தில் உள்ளது.

இது முதன் முறை

டெஸ்டில் குறைந்தது 2 நாள் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட போட்டியில் (கான்பூர்), இந்திய அணி முதன் முறையாக, நேற்று வெற்றி பெற்றது. முன்னதாக இங்கிலாந்து 4, நியூசிலாந்து 3 முறை இதுபோல வென்றன.

1982க்குப் பின்...

இந்திய மண்ணில் நடந்த போட்டியில், அதிக ரன்ரேட் கொண்ட டெஸ்ட் ஆனது கான்பூர். இந்தியா, வங்கதேச அணிகளின் சராசரி ரன்ரேட், 4.39 ஆக இருந்தது. முன்னதாக 1982ல் இந்தியா-இலங்கை மோதிய சென்னை டெஸ்ட் ரன்ரேட் 4.13 ஆக இருந்தது.

929 ரன்

துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 2024ல் பங்கேற்ற டெஸ்டில் இதுவரை 929 ரன் எடுத்துள்ளார். 23 வயதுக்குள் டெஸ்டில் ஒரே ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் கவாஸ்கரை (918, 1971) முந்தினார்.

* இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து, 100 ரன்னுக்கும் மேல் 'ஸ்டிரைக்ரேட்' கொண்ட இரண்டாவது இந்தியர் ஆனார் ஜெய்ஸ்வால் (51 பந்தில் 72 ரன், 45ல் 51). இதற்கு சேவக் (46ல் 55, 55ல் 55) 2011ல் இதுபோல அடித்தார்.

*தவிர, வங்கதேசத்திற்கு எதிரான இரு டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் ஜெய்ஸ்வால் (189). சுப்மன் கில் (164), ரிஷாப் (161) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

கோலி '1000'

டெஸ்டில் 1000 பவுண்டரி அடித்த 6வது இந்தியர் ஆனார் கோலி. சச்சின் (2058), டிராவிட் (1654), சேவக் (1233), லட்சுமண் (1135), கவாஸ்கர் (1016) முதல் 5 இடத்தில் உள்ளனர்.

சிறந்த கேப்டன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அரங்கில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட கேப்டனாக ரோகித் (66.7%) உள்ளார். கோலி (63.6), ஸ்டோக்ஸ் (62.5) அடுத்த இரு இடம் பெற்றனர்.

தொடரும் முதலிடம்

வங்கதேச தொடரை வென்ற இந்திய அணி, 74.24% புள்ளியுடன், 2023-25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50), இலங்கை (55.56), இங்கிலாந்து (42.19) 2, 3, 4வதாக உள்ளன.

சபாஷ் காம்பிர்

இங்கிலாந்து டெஸ்ட் அணி பயிற்சியாளர் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (செல்லமா 'பாஸ்'). 2022ல் இவரது வருகைக்குப் பின் இங்கிலாந்து வீரர்கள் டெஸ்டில் அதிரடியாக ரன் சேர்த்தனர். இதனை 'பாஸ் பால்' முறை என்றனர்.

இதுபோல, இந்திய அணி புதிய பயிற்சியாளர் காம்பிர், தனது தலைமையிலான முதல் டெஸ்டில், தனது வீரர்களை அதிரடியாக ரன் சேர்க்க வைத்து, இரண்டே நாளில் வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.






      Dinamalar
      Follow us