sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

அதிவேக 27,000 ரன் * கோலி புதிய சாதனை

/

அதிவேக 27,000 ரன் * கோலி புதிய சாதனை

அதிவேக 27,000 ரன் * கோலி புதிய சாதனை

அதிவேக 27,000 ரன் * கோலி புதிய சாதனை


ADDED : செப் 30, 2024 10:58 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கான்பூர்: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. இந்தியாவின் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் 2, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டர்கள் 'டி-20' போல ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி 'மின்னல்' வேக துவக்கம் கொடுத்தது. ஹசன் அகமது வீசிய முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். மறுபக்கம் 2வது ஓவர் வீசினார் காலேத். இதில் தான் சந்தித்த முதல் இரு பந்தில் இரண்டு சிக்சர் அடித்தார் ரோகித். இந்தியா 3 ஓவரில் 51/0 ரன் எடுத்தது.

ரோகித் 23 ரன்னில் அவுட்டான போதும், ஜெய்ஸ்வால் 31வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 51 பந்தில் 72 ரன் எடுத்து அவுட்டானார். சுப்மன் கில் 39, ரிஷாப் பன்ட் 9 ரன் எடுத்தனர்.

அடுத்து கோலி, ராகுல் இணைய, இந்திய அணியின் ரன்வேகம் மீண்டும் எகிறியது. ராகுல் அரைசதம் எட்டினார். 59 பந்தில் இந்த ஜோடி 87 ரன் எடுத்த போது, கோலி (47) அவுட்டானார்.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன் என்ற இலக்கை எட்டினார்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய வீரர் ஆனார். டெஸ்ட் (194 இன்னிங்ஸ், 8928 ரன்), ஒருநாள் (283ல் 13,906), 'டி-20' (117ல் 4188) என மூன்றுவித கிரிக்கெட்டில் கோலி, இதுவரை 594 இன்னிங்சில் 27,012 ரன் எடுத்துள்ளார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின், 623 இன்னிங்சில் இந்த ரன்களை எடுத்திருந்தார்.

* சர்வதேச அரங்கில் 27 ஆயிரம் ரன் எடுத்த 4வது வீரர் ஆனார்.

இதன் விபரம்

வீரர்/அணி இன்னிங்ஸ் ரன் சதம்/அரைசதம்

சச்சின்/இந்தியா 782 34,357 100/164

சங்ககரா/இலங்கை 666 28,016 63/153

பாண்டிங்/ஆஸி., 668 27,483 71/146

கோலி/இந்தியா 594 27,012 80/140






      Dinamalar
      Follow us