ADDED : ஜன 23, 2026 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சி.கே.நாயுடு கோப்பை (23 வயது) தொடர் நடத்தப்படுகிறது. நத்தம் என்.பி.ஆர்., மைதானத்தில் நேற்று துவங்கிய போட்டியில் தமிழகம், ஆந்திரா மோதுகின்றன.
முதலில் களமிறங்கிய ஆந்திர அணிக்கு கேப்டன் ஹேமந்த் (10) ஏமாற்ற, அபினவ் 30, தேஜா 46 ரன் எடுத்தனர். வெங்கட்ட ராகுல் 65 ரன் எடுத்து உதவினார். ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுழலில் ஜொலித்த தமிழகத்தின் சச்சின் ரதி, 8 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய தமிழக அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 56/1 ரன் எடுத்து, 165 ரன் பின்தங்கி இருந்தது. அமித் சாத்விக் (32), கிரண் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

