/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
விமர்சனத்தால் கவலை இல்லை * உற்சாகத்தில் ஹர்ஷித் ராணா
/
விமர்சனத்தால் கவலை இல்லை * உற்சாகத்தில் ஹர்ஷித் ராணா
விமர்சனத்தால் கவலை இல்லை * உற்சாகத்தில் ஹர்ஷித் ராணா
விமர்சனத்தால் கவலை இல்லை * உற்சாகத்தில் ஹர்ஷித் ராணா
ADDED : பிப் 07, 2025 11:01 PM

கட்டாக்: ''பலரும் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு தான் இருப்பர். இது குறித்தெல்லாம் கவலைப்பட மாட்டேன்,'' என ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. ஆஸ்திரேலிய தொடரில் பெர்த் டெஸ்டில் (4 விக்.,) அறிமுகம் ஆனார். தொடர்ந்து அடிலெய்டு டெஸ்டிலும் சேர்க்கப்பட, ஆகாஷ் தீப் வாய்ப்பு பறிபோனது. இதுகுறித்து விமர்சனம் எழுந்தன. தற்போது, டெஸ்ட், 'டி-20', ஒருநாள் என மூன்று வித கிரிக்கெட்டிலும் அறிமுக போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய, முதல் இந்திய பவுலர் ஆனார். இதுகுறித்து ஹர்ஷித் ராணா கூறியது:
தேசத்திற்காக விளையாட வேண்டும் என்பது தான் எனது நோக்கம். மறுபக்கம், பலரும் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டு தான் இருப்பர். இதுகுறித்தெல்லாம் கவலைப்பட மாட்டேன். விமர்சனங்களுக்கு பதில் தெரிவித்து எனது கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை.
ஏனெனில் கிரிக்கெட்டில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அணியில் இடம் பெறுவது குறித்து மைதானத்திற்கு வரும் போது தான் தெரியும். இதற்கேற்ப மனதளவில் தயாராக இருந்தேன்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, துல்லியமான முறையில் பவுலிங் செய்ய விரும்பினேன். முதல் போட்டியில் புதியதாக எதுவும் செய்து விடவில்லை. ஆடுகளத்தில் சரியான இடத்தில் பந்தை 'பிட்ச்' செய்து பவுலிங் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தினேன். இதற்கான பலன் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

